கோலாகலத்துடன் இலங்கையில் தொடங்கியது ஜல்லிக்கட்டு! - Seithipunal
Seithipunal


இந்த வருடம் பொங்கல் திருநாளை முன்னிட்டு இலங்கையின் திருகோணமலையில் முதன் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது.

தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடைகள் வந்தபோது, தமிழர்கள் அனைவரும் ஒன்றாய் இணைந்து அந்த தடையை உடைத்தெறிந்தனர்.

இந்த வருடம் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சன்குறிச்சியில் இன்று தொடங்கியுள்ளது. இதேபோல் மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளும், காளைகளும், மாடுபிடி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், வரலாற்றில் முதல் முறையாக இன்று இலங்கை நாட்டின் திருகோணமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி உள்ளது. 200 காளைகள், 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்ளும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆயிரக்கணக்காக மக்கள் கூடினர்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சரவணன் ஆகியோர் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஆரம்பித்து வைத்தனர்.

சில மாதங்களுக்கு முன் திருச்சி வந்த இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,  இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தெரிவித்திருந்த நிலையில், இன்று அந்நாட்டின் சுற்றுலா துறை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanka Triconmalee Jallikattu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->