அரசு பேருந்தில் திடீரென வந்த புகை -  பயணிகளின் உயிருக்கு ஆபத்தா? - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் இருந்து சித்தார்பட்டிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஆரோக்கியா அகம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென பேருந்தின் உள்பகுதியில் இருந்து புகை கிளம்பியுள்ளது. 

இதைப் பார்த்த பயணிகள், அலறி அடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடினர். இதனால், அச்சமடைந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உள்ளிட்டோர் விரைந்து வந்து பார்த்ததில், டியூப் லைட்டிற்குச் செல்லும் மின் வயர்கள் உரசி புகை கிளம்பியிருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவர்கள் டியூப் லைட் சுவிட்சை நிறுத்திவிட்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் புகை அனைத்தும் அடங்கியது. இதைத்தொடர்ந்து, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் பேருந்தை நிறுத்தி விட்டு கிளம்பிச் சென்றனர். இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

smoke out from government bus in theni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->