20 மாணவர்கள் மருத்துவனையில் அனுமதி.! எலி இறந்து கிடந்த தண்ணீரை குடித்தால் நேர்ந்த சோகம்..!! பெற்றோர்கள் அதிர்ச்சி..!!! - Seithipunal
Seithipunal


சங்கராபுரம் அருகே அரசுப் பள்ளியில் எலி இறந்து கிடந்த தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீரைப் பருகிய மாணவர்களில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிராமத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில்  750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று, பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீரைப் குடித்துள்ளனர். தண்ணீர் பருகிய சிறிது நேரத்தில் மாணவர்களில் 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்தபோது அதில் எலி ஒன்று செத்து மிதந்தது கிடந்தது.  

இந்த சம்பவத்தை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பதற்றத்துடன் மருத்துவமனைக்கு வந்து தனது பிள்ளைகளை பார்த்தனர். பின்னர், மருத்துவரிடம் மாணவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.  

இதற்கிடையே, சுகாதாரத் துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து எலி இறந்து கிடந்த தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்தனர். பின்னர், அந்தத் தொட்டியை சுத்தப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sangarapuram School 20 Students Health Problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->