சேலம்: காவிரி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 5 பேரில் 4 பேர் சடலமாக மீட்பு.! ஒருவரை தேடும் பாணி தீவிரம்..!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்தவர் கோபால். இவர் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றுகிறார். இவரது வீட்டிற்கு ஈரோடு மாவட்டம் ஜெயமங்கலத்தில் இருந்து வந்த உறவினர்கள் உள்பட 6 பேர் ஒரே குழுவாக அருகில் உள்ள காவிரியில் குளிக்க சென்றனர். 

இரு தினங்களுக்கு முன் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை அறியாத அவர்கள் ஆற்றில் இறங்கிய போது அடுத்தடுத்து நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். கூக்குரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக தனுஸ்ரீ என்ற கல்லூரி மாணவியை மட்டும் பத்திரமாக மீட்டுள்ளனர். 

கோபாலின் மற்றொரு மகளான வாணிஸ்ரீ, ஹரிஹரன் மற்றும் ஜெயமங்கலத்தை சேர்ந்த சரவணன் அவரது மனைவி மைதிலி, பிரவீணா என்ற 15 வயது பெண் உட்பட 5 பேரும் வெல்ல நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த விடயம் அறிந்து களத்தில் இறங்கிய மேட்டுர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காவேரி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 5 பேர்களில் இதுவரை 4 பேர் சடலமாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கடுமையான முயற்சிக்கு பின் அவர்களின் உடல்கள் மீட்டுள்ளனர். 

சம்பவம் நடந்த இடமான ரெட்டியூரில் காவிரி ஆற்றில், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ஆய்வு செய்து வருகிறார். இச்சம்பவம் ரெட்டியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salem cavery river accident report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->