தீரன் படத்தில் வருவதுபோல்.. திருப்பூரில் கொள்ளையர்கள் நடத்திய கோரத்தாண்டவம்.!! இரத்தவெள்ளத்தில் கத்தி கதறிய குடும்பம்.!! - Seithipunal
Seithipunal


முகமூடி அணிந்து கொண்டு கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்களை பிடிக்க முயன்ற குடும்பத்தை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியின் ஆண்டிபாளையம் அருகே உள்ள ஜான்ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் பாலகிருஷ்னன், இவர் பனியன் கம்பனி அதிபர் ஆவர். இவரும், மனைவி சுப்புலட்சுமி மற்றும் மகன் கோகுல் ஆகியோருடன் வீட்டில் இரவு உறங்கி கொண்டிருந்தனர். 

அப்போது, இன்று (14.07.2018) அதிகாலை 2 மணி அளவில் யாரோ வீட்டு பூட்டை உடைப்பது போல் சத்தம் வந்ததை அறிந்த பாலகிருஷ்ணன் வெளியே வந்துள்ளார். அப்போது இரண்டு முகமூடி கொள்ளையர்கள் திடீரென வீட்டினுள் நுழைந்து பாலகிருஷ்ணனை சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்தகாயமடைந்த அவர் கத்தியபடியே அலறி கொண்டு நிலை தடுமாறி கீழே விழந்துள்ளார். பாலகிருஷ்ணனின் அலறல் சத்தம் கேட்டு விழித்து கொண்ட அவரது 14 வயது மகனும், அவரது மனைவியும் கொள்ளையர்களை பிடிக்க முயன்றுள்ளனர். இதில், சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள், அவர்களையும் கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கினர்.

கொள்ளையர்கள் கண்மூடித்தனமாக தாக்கியதில், பாலகிருஷ்ணனின் மகன் தலையில் படுக்கமடைந்து ரத்த வெள்ளத்தில் கத்தி கத்தினார். மேலும், பாலகிருஷ்ணனின் மனைவிக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி பாலகிருஷ்ணனின் மனைவி அணிந்திருந்த 2 1/2 பவுன் தங்க நகையை கொள்ளையர்கள் பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர்.

சுயநினைவு வந்த பழகிருஷ்ணனும் அவரின் மகனும் இரத்தம் சொட்ட, சொட்ட, திருடன், திருடன் என வீட்டின் ஜன்னல் கதவை திறந்து கொண்டு கத்தினார். இவர்கள் கத்துவதை கேட்டு மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கொள்ளையர்கள் முன்வாசல் வழியே எகிறி குதித்து தப்பி ஓடினர்.

அதோடு நில்லாமல், அந்த கொள்ளையர்கள் அருகில் இருந்த செந்தில் நகர் குடியிறுப்பு பகுதிகளில் புகுந்துள்ளனர். அங்குள்ள மூன்று வீடுகளில் திருட முயற்சித்து வீட்டு கதவை திறக்க முடியாததால் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து திருப்பூர் மத்திய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் திருப்பூர் மாவட்ட மக்கள் கடும் பீதியில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ROBBERY ATTACKED A FAMILY


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->