விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றச் சென்றவர்களுக்கு  நடந்த சோகம்…!      - Seithipunal
Seithipunal


நேரம் சரியில்லா விட்டால், நல்லது செய்யப் போனாலும் கெட்டது நடக்கும், என்று பெரியவர்கள் பழமொழி சொல்வார்கள். அதற்கேற்ப வேதனையான சம்பவம் நடைபெற்றுள்ளது.
    
நேற்று முன் தினம், கேரளாவிலிருந்து, பெங்களுர் நோக்கி ஒரு ஆம்னி பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது. இந்த ஆம்னி பஸ்ஸில் 39 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
    
இந்த பஸ் நேற்று அதிகாலை 1 மணிக்கு, திண்டுக்கல் – பெங்களுர் நான்கு வழிச் சாலையில், வேடசந்துார் நாகம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தது.  அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ், சாலையோர பள்ளித்தில் விழுந்து கவிழ்ந்தது.
    
அப்போது, அந்த வழியாக வேனில் வந்த கேரளாவைச் சேர்ந்தவர்கள், ஜோஸ் ( வயது 35 ), ஆணி (வயது 49) ஆகியோர், விபத்தினைப் பார்த்து, பதறிப் போனார்கள். உடனடியாக, தாங்கள் வந்த வேனை நிப்பாட்டி விட்டு, விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற விரைந்தனர்.


    
கவிழ்ந்து கிடந்த பஸ்ஸில் இருந்தவர்களை ஒவ்வொருவராக வெளியேற்றிக் கொண்டிருந்தனர். காப்பாற்றப் பட்டவர்கள், சாலையோரம் நின்று கொண்டிருந்தனர்.
    
அப்போது, அந்த வழியாக வந்த மற்றொரு ஆம்னி பஸ், எதிர்பாராத விதமாக, இவர்கள் மீது மோதியது.  இதில், ஏற்கனவே கவிழ்ந்திருந்து பஸ்ஸில் இருந்து காயங்களுடன் காப்பாற்றப்பட்ட தாராபுரத்தைச் சேர்ந்த ராஜன், மற்றும் விபத்து பயணிகளைக் காப்பாற்றிக் கொண்டிருந்த, ஜோஸ், மற்றொரு பயணி, ஜாஸ்முன் ஜோஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.


    
மற்றவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

road accident in thindukal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->