தமிழக பெண்களின் சாபத்தை வாங்கிக்கொள்ள மீண்டும் ஆரம்பமாகியது..! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் பாமகவின் வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் 800 க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 49 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு. தற்போது 125 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் ''தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்பின், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனையடுத்து, நேற்று ஈரோடு மாநகர் பகுதியில் 19 இடங்களில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அரசின் மதுபான கடைகளை எவ்வளவு சட்ட போராட்டங்கள் செய்து மூடினாலும், நம் தமிழக அரசு மீண்டும் திறந்து கொண்டதுதான் வருகிறது. மது குடிப்பதை நம் தமிழர்கள் நிறுத்தாத வரை, யாரை குறை சொல்லியும் ஒன்றும் ஆகப்போவதில்லை. ''திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... திருட்டை ஒழிக்க முடியாது''.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reopen tn tasmak in erode


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->