எச்ஐ.வி. ரத்தத்தை கர்ப்பிணிக்கு செலுத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது….! அரசு மருத்துவமனையின் அலட்சியத்தை எதிர்த்து தொடரும் ஆர்ப்பாட்டம்…! - Seithipunal
Seithipunal


 

எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு, தற்போது, மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த எச்.ஐ.வி. தொற்று, அந்தப் பெண்ணின் வயிற்றில் இருக்கும் 8 மாத சிசுவிற்கு பரவாமல் இருக்க, முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தற்போது, தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் மெத்தனத்தைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் துவங்கி உள்ளது.

அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்கள் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு, விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தினை முற்றுகை இட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல், சாத்துார் ஆர்.டி.ஓ. அலுவலகத்தையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவறு செய்த அரசு ஊழியர்களை, டிஸ்மிஸ் செய்து, அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும், என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பொது மக்களும் சேர்ந்து கொண்டனர்.

 

இந்த விவகாரம் குறித்து, சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

protest against the Govt. hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->