மேட்டூர் அணையின் அருகில் மளமளவென குவிக்கப்படும் போலீசார்: என்ன நடக்கிறது இந்த வேளையில்..? பலப்படுத்தப்படும் பாதுகாப்பு..!! - Seithipunal
Seithipunal


முழு கொள்ளளவை எட்டி கடல் போல காட்சியளிக்கும் மேட்டூர் அணையை காண திருவிழாக் கூட்டம் போல் மக்கள் திரண்டுள்ளனர். அணை பூங்காவில் தின்பண்ட கடைகள் முதல் ரங்க ராட்டினம் வரை அணிவகுப்பாக வந்துள்ளனர்.

மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்துள்ளதால் மேட்டூரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு சுற்றுலா செல்வது போல் குடும்பமாக பொதுமக்கள் வருகை தந்துள்ளனர்.

மேட்டூர் அணை நிரம்பியதால் இன்று 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. 39 வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

கர்நாடக அணைகளில் திறக்கப்படும் உபரி நீர் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் கடந்த மாதம் 40 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று, 120 அடியை எட்டுகிறது.

அணையில் இருந்து விநாடிக்கு 30,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், 40000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 68,489 கனஅடியாக உள்ளது.

இதனால், காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டி வருவாய்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம், தஞ்சாவூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police production near mettur dam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->