சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்!. இரு பெண்களுக்கு மட்டும் ஜாமின்: 9 பேருக்கு சிறை தண்டனை!. - Seithipunal
Seithipunal



சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு எதிராக பேசியதாக சீமான் மீது ஓமலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் சீமான், ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,  சீமானுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதன்படி,  சேலத்தில் ஒரு வாரமாக தங்கியுள்ள சீமான், தினமும் ஓமலூர் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வருகிறார்.

இதனையடுத்து கூமாங்காடு கிராமத்துக்கு தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்ற சீமான், அங்குள்ள விவசாயிகளைச் சந்தித்து பேசினார். சேலம் அருகே எட்டுவழிச்சாலை பணிகள் நடைபெறும் பகுதிக்கு அனுமதி பெறாமல் சென்ற சீமான் உள்ளிட்ட 11 பேரைக் கைது செய்தனர்.

மல்லூர் காவல்நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட 11 பேரில் 2 பெண்களை மட்டும் சொந்த ஜாமீனில் விடுவித்த போலீசார், சீமான் உட்பட 9 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police arrested 9 people including Seeman and imprisoned


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->