தமிழகத்தில் புயல் தாக்க போகிறதா? நாகை மாவட்ட ஆட்சியர் பொது மக்களுக்கு அதிரடி வேண்டுகோள்,!! - Seithipunal
Seithipunal


வங்க கடலில் உருவான கஜா புயல் கடந்த 15 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் அருகே 140 கி.மீ வேகத்தில் புயல் தாக்கி கரையை கடந்தது.  கஜா புயல் கரையை கடக்கும் போது நாகப்பட்டிணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதால், பல லட்சம் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. பலர் தங்களின் வீடுகளை இழந்தனர்.

தற்போது வரை புயல் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு மீள முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை மீட்டுப்பணிகள், மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கஜா புயல் தாக்குதலுக்கு பின் வானிலை குறித்து செய்திகள் வந்தாலே அந்த பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகின்றனர். 

அந்த அளவிற்கு இந்த கஜா புயல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கஜா புயலை விட மோசமான ஒரு புயல் நாகை உள்ளிட்ட பகுதிகளை தாக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வரவு வருகிறது. இது குறித்து நாகை மாவட்ட மக்களுக்கு ஒரு அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதில், ''புயல் சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். புயல் குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று நாகை ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NO NEXT CYCLONE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->