வெளுத்து வாங்கும் கனமழை: வெள்ள காடாக மாறிய ''உப்பளங்கள்''! சோகத்தில் தொழிலாளர்கள்! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டம் வேதாரண்யம் கோடியக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. 

வேதாரண்யம் பகுதியில் அகத்தியர் பள்ளி, கோடியக்காடு உள்ளிட்ட கிராமங்களில் 3000 ஏக்கர்களில் நடைபெற்று வரும் உப்பளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு மாதங்களுக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தரிசு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. உப்பளங்களில் வாய்க்கால்கள் சீர் அமைத்தல், வாய்க்கால்கள் சரி செய்தல், மோட்டார் பொருத்துதல், களிமண் மற்றும் புழுதி மணல்கள் கொண்டு வாய்க்கால் அமைப்பது போன்ற பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கி ஆரம்ப கட்ட தரிசு பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் உப்பு உற்பத்தி செய்வது பிப்ரவரி மாதத்தில் தான் தொடங்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 10000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagapattinam heavy rain Salts turned flooded 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->