மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு.! பெற்றோர்களே உஷார்.!! உங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியை நோட்டமிடுங்கள்.!!! - Seithipunal
Seithipunal


இரு தினங்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இயங்கி வரும் தனியார் பள்ளியான ''ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் பள்ளி''-யில் தீ விபத்து ஏற்பட்டதில் மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.

இதையடுத்து பள்ளிகள் பராமரிப்பு, பாதுகாப்பு குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் சார்பில் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தனியார் பள்ளியில் நடந்த தீவிபத்துக்கு காரணம், மின் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. மேலும், பள்ளியில் உள்ள தீயணைப்பு உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததால், தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த சம்பவத்தின் தீவிரம் அறிந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்கம் சுற்றறிக்கை மூலம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது,

# ''பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்யும் அமில பொருட்களை, சுத்தம் செய்த பின், பள்ளிக்கு வெளியே பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். 

# கழிப்பறைகளை சுத்தம் செய்யும் அமில பொருட்களின் இருப்பு விவரத்தினை பள்ளியின் முதல்வர் வாரம் ஒரு முறை உரிய பதிவு செய்து கண்காணிக்க வேண்டும். 

# வேதியியல் ஆய்வுக்கூடத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் இருக்கும் இடத்தையும் பாதுகாப்பாக வைத்து, அதன் இருப்பு விவரத்தினை பள்ளியின் முதல்வர் வாரம் ஒரு முறை உரிய பதிவு செய்து கண்காணிக்க வேண்டும். 

# வேதியியல் ஆய்வகத்திற்கு எரிவாயு (சிலிண்டர்) இணைப்பு அளிக்கப்பட்டிருப்பின், எரிவாயு உருளை ஆய்வகத்திற்கு வெளியே பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.

# பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

# பள்ளியில் உள்ள கழிப்பறைகளைச் சுத்தம் செய்து, நல்ல நிலையில் கழிப்பறைகளை இருக்கும்படி சரிசெய்து மாணவர்கள் பயன்படுத்த அமைத்திட வேண்டும். 

# பள்ளி வளாகத்தில் புதர், கற்குவியல்கள் மற்றும் கழிவுப் பொருட்களின் குவியல்கள் இல்லாதவாறு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

# தண்ணீர் தொட்டிக்குள் அனைத்தும் முறையாக மூடப்பட்டு, அதனைப் பூட்டி பாதுகாப்பாக இருபத்தி உறுதி செய்ய வேண்டும்.

# பள்ளியில் உள்ள மின் இணைப்புகளை பராமரித்து அவற்றை மாணவர்கள் அணுகாதவாறு பாதுகாப்பான முறையில் மூடி வைத்திட வேண்டும்.

# முக்கியமாக பள்ளி வளாகத்தில் பட்டுபோன மரங்கள் இருப்பின் அதனை உரிய அனுமதி பெற்று உடனடியாக அகற்ற வேண்டும்.

மேற்கண்ட அறிவுறைகள் அனைத்து மெட்ரிகுலேஷன்/ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி பள்ளி முதல்வர்களின் ஒப்புதல் பெற்று கோப்பில் வைக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனை, மாவட்ட கல்வித்துறை ஆய்வு அலுவலர்கள், பள்ளி ஆய்வு மற்றும் பள்ளி மேற்ப்பார்வையின் போது மேற்கண்ட அறிவுரைகளை பள்ளி நிர்வாகம் பின்பற்றப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.'' என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

matriculation department new order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->