மெரினா போராட்டம்! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சவுக்கடி! நாளை முக்கிய தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


கடந்த சிலநாட்களுக்கு முன் அய்யாக்கண்ணு அவர்கள் மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். இந்த மனுவை கடந்த ஒரு வரமாக விசாரித்த நீதிபதி, இன்று தமிழக அரசை சரமாரியாக கேள்விகேட்டுள்ளது.

அதன்படி, 
கோவில், தேவாலயங்களில் திருவிழாக்காலங்களில் மக்கள் கூடுவதால், திருவிழாக்களை தடை செய்வீர்களா? 

மக்கள் போராடும் போராட்டங்களை ஒழுங்கு படுத்துவது ஒரு அரசின் கடமை, அதற்கு மாறாக போராட்டமே செய்யக்கூடாது என சொல்வதற்கு எந்த அரசுக்கும் எந்த அதிகாரமும் இல்லை. இது மக்கள் மீது அடக்குமுறையை தொடுக்கும் முறையாகும்.

காவேரி நீரை விட மெரினா ஒன்றும் பெரிதல்ல, தமிழக அரசு சட்ட ஒழுங்கை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும். 

கடந்த 2003 க்கு பிறகு ஜல்லிக்கட்டு போராட்டத்தை தவிர வேறு எந்த போராட்டங்களுக்கும் மெரினாவில் போராட அனுமதி அளிக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?

சரியான காரணம் சொல்லாமல், வெறுமனே மெரினாவில் போராட யாருக்கும் அனுமதி இல்லை என்பது அரசின் மீது சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது. என உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த வழக்குக்கான தீர்ப்பை நாளை ஒத்திவைத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Marina Struggle High Court Tomorrow's key judgment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->