கடலூருக்கு வந்த சோதனை! இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாக்கடையில் விழுந்த அவலம்! - Seithipunal
Seithipunal


கடலூர் பாரதி ரோடு அடையார் ஆனந்தபவன் அருகில் உள்ள  கால்வாய் பல நாட்கள் ஆகியும் இன்னும் சரி செய்யபடாமல் திறந்த நிலையிலே உள்ளது. இதன் காரணமாக பள்ளி குழந்தைகள் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர் இன்றும் ஒருவர் அதில் நிலை தடுமாறி தனது இரண்டு சக்கர வாகனத்துடன் அதில் விழுந்துவிட்டார். 

உண்மையில் மிகவும் சீர் கெட்ட நிலையில் நகரம் உள்ளதாக முகநூல் முழுவதும் பதிவுகள் குவிந்த வண்ணம் உள்ளது. ஒரு நகர நெடுஞ்சாலையிலயே இந்த அவலமா? சாக்கடையில் விழுந்த அவரின் மனநிலை எப்படி இருக்கும் என கடலூர் வாசிகள் புலம்பியபடியே கலைந்து சென்றனர். 

இதே போன்று அகன்ற சாக்கடைகள் கிருஷ்ணசாமி பள்ளி அருகில் ( பெட்ரோல் பங்க் அடுத்த சாலை), GH எதிரில் உள்ள சாலையிலும் உள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக இரவில் தெரு விளக்கு கூட கிடையாது, .ஒரு கார் தாராளமாக விழும் அளவிற்கு சாக்கடைகள் திறந்த நிலையிலே உள்ளது. 

இதோடு மட்டுமல்லாமல் அனைத்து தெருக்களிலும் பாதாள சாக்கடை  விபத்துக்கு காரணமாக இருக்கின்றன, ஆனால் நகராட்சி நிர்வாகம் இதனைப்பற்றி எல்லாம் இதுவரை கவலைப்பட்டதாக தெரியவில்லை எனவும் கடலூர் வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man dive in drainage with two wheeler in main road


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->