சவால்களை சந்திக்கும் போது கேப்டனை நினைப்போம்: கார்த்தி உருக்கம்  - Seithipunal
Seithipunal


தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க முடியாதது என்னுடைய வாழ் நாள் முழுவதும் குறையாகவே இருக்கும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை கொண்டாடுவதற்காக வெளிநாடு சென்றிருந்தார். அதனால் அவரால் விஜயகாந்த் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.  இந்நிலையில் நேற்று நாடு திரும்பிய நடிகர் கார்த்தி,  அவரது தந்தை சிவக்குமாருடன்  சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினர்.

அப்போது கார்த்தி பேசுகையில், கேப்டன்  மறைந்து விட்டார் என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரோட இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செய்ய முடியவில்லை என்பது என் வாழ்நாள் முழுவதும் குறையாகவே இருக்கும். 

கேப்டனுடன் நெருங்கி பழகக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தது இல்லை. ஆனால் எனது சிறுவயதில், நடிகர் சங்கத்தில் யார் வேண்டுமானாலும் உணவு சாப்பிடலாம் என்று கூறுவார்கள்.

அவர்   நடித்த படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் நடிகர் சங்க தேர்தலில்  ஜெயித்த பிறகு கேப்டனைச் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.  அப்போது மிகவும் மகிழ்ச்சியாக வாழ்த்தினார்.  நடிகர் சங்கத்தில் பிரச்சனைகளை  சந்திக்கும் போதெல்லாம் அவரை நினைத்துக் கொள்வோம்.

தலைவன் என்றால் முன்னின்று அனைத்து வேலைகளையும் செய்யவேண்டும் என்பதை அவரைப் பார்த்து தான் கற்றுக் கொண்டோம். ஒரு மிகப்பெரிய ஆளுமை நம்முடன் இல்லை என்பது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  அவர் எப்போதும் எங்கள் நினைவில்  இருந்து கொண்டிருப்பர். 
 
வரும் 19-ம் தேதி நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் சாருக்கு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம். நடிகர் சங்கம் செய்ய வேண்டிய விஷயங்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுப்பது குறித்து அன்றைய தினம் அறிவிப்போம்.

கேப்டன்  அனைவருக்கும் அன்பு நிறைய கொடுத்து இருக்கிறார். அவரோட குடும்பத்தினருக்கும்,  ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Let's think of the captain when we face challenges: Karthi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->