கன்னியாகுமரியில் 7 ஆயிரம் மதுப்பாட்டில்கள் பறிமுதல்..போலீஸ் விசாரணை.!! - Seithipunal
Seithipunal


நாளை மறுநாள் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குபதிவு நடைபெற இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. 

மக்களவை தேர்தலை முன்னிட்டு  தமிழ்நாட்டில் டாஸ்மார்க் மது கடைகள் மூடப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் மதிப்பிலான 7000 மது பாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பமும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari police ceased liquor bottles


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->