தமிழக-கர்நாடக எல்லையில் பரபரப்பு! கன்னட அமைப்பினரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீசார்! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் மற்றும் விவசாய சங்கத்தின் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 

இதற்கு பா.ஜ.க உள்பட சில காட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தில் போராட்டம் நடந்து வரும் நிலையில் கர்நாடக எல்லையில் கன்னட அமைப்புகளின் சார்பில் சமீப காலமாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இன்று கர்நாடகா ரக்ஷன வேதிகே கன்னட கூட்டமைப்புகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக அத்திபள்ளியில் இருந்து மாநில தலைவர் சிவராம் கவுடா, நாகராஜ் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்த கன்னட அமைப்பினர் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனை அடுத்த போலீசார் அவர்களை களைந்து செல்லுமாறு தெரிவித்தும் ஏற்க்காததால், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சுமார் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kannada organizations road blockade Police arrest


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->