கனிமொழியியுடன் மைக்கிலேயே சண்டையிட்ட கிராம மக்கள்!! அடிதடி சம்பவத்தால் அதிர்ச்சியில் கனிமொழி!!  - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுதும் உள்ள அனைத்து ஊராட்சிகளில், திமுக கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறது. இதில் மாவட்ட வாரியாக சில ஊராட்சி மன்ற கூட்டத்தில் ஸ்டாலினும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மக்களிடம் கருது கேட்கின்றார். 

அவ்வாறு, இன்று கரூர் மாவட்டத்தில் இரண்டு ஊராட்சி சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அரவக்குறிச்சி ஈசநத்தம் கிராமத்தில், இன்று காலை திமுக கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அதில், அவர் பொதுமக்களிடம் குறைகள் அடங்கிய மனுக்களை பெற்று கொண்டார். 

இதனைதொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டங்களில் கனிமொழி கலந்து கொண்டு மக்களிடம் குறைநிறைகளை கேட்டறிகிறார். 

இந்நிலையில், மேல ஈரால் என்ற கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கலந்துகொண்ட கனிமொழியிடம், கிராம மக்கள் சிலர் 'நூறு நாள் வேலை திட்டத்தில் லஞ்சம் வாங்குவதாக' மக்கள் புகார் அளித்தனர். இதனை பார்த்த அந்த கிராமத்தின், கணக்காளர் உடனே ஒலிவாங்கியை பறித்து தன்மீதுள்ள காழ்புணர்ச்சியால் கூறுவதாக குற்றம் சாட்டினார்.

இதனால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கனிமொழி தலையிட்டு நிறுத்த முயன்றும் முடியாததால், பின்னர் போலீசார் தடுத்தி நிறுத்தினர். இச்சம்பவத்தினால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanimozhi in grama sabha of thoothukudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->