இலங்கைக்கு ரகசியமாகக் கடத்த திட்டம்..! 300 கிலோ எடை.! இது மீன் அல்ல.. வேற..!!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில், கடலுக்குள் மீன் பிடிக்கச்  சென்ற ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை இலங்கைப் படையினர் கைப்பற்றி, அவர்களது வலைகளையும் சேதப்படுத்தி உள்ளனர்.

இதைக் கண்டித்து, தற்போது, ராமேஸ்வரம் மீனவர்கள் விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் செல்லவில்லை. மேலும்,  அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு, மீன்களும் கிடைக்காததால், விசைப் படகுகளை, கடலுக்குள் செலுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், நாட்டு மரப் படகுகளைக் கொண்டு, ராமேஸ்வரம் கடலில், கடல் அட்டைகளைப் பிடித்து வைத்துள்ளார்கள் சிலர்.

நேற்று மாலை, ராமேஸ்வரம் அருகே உள்ள, சேரான்கோட்டை கடற்கரையில் மரைன் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது, கடற்கரை ஓரத்தில், மறைவான ஒரு இடத்தில், பிளாஸ்டிக் பைகளில், 300 கிலோ எடை கொண்ட, உயிருள்ள கடல் அட்டைகள் இருப்பதைக் கண்டு,  அவர்கள் அதனைக் கைப் பற்றினர்.

இந்தக் கடல் அட்டைகளின் மதிப்பு 1 லட்ச ரூபாய். இதனைப் பதப்படுத்தி, சிலர் இலங்கைக்கு ரகசியமாகக் கடத்த திட்டமிட்டுள்ளனர்.

ரோந்து போலீசார் வருவதை அறிந்து, கரையிலேயே கடல் அட்டைகளைப் போட்டு விட்டு ஓடி உள்ளனர். இது தொடர்பாக, ராமேஸ்வரத்தில் கடல் அட்டைகளைப் பிடித்து வரும் போஸ் என்பவரைப் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kadal Attaigal Robber To Sri Langa 300 Kilo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->