சிறைவாசிகளுக்கு இனி வீடியோ கால் பேசும் வசதி - அமைச்சர் ரகுபதி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் தற்போது துறை ரீதியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று சட்டப்பேரவை கூட்டுத்தொடரில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறைவாசிகள் தங்களின் குடும்ப உறுப்பினர்களிடம் பேச வீடியோ கால் வசதி ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறைவாசிகளுக்கான தொலைபேசி வசதி கால அளவு 3 நாட்களுக்கு ஒரு முறை, மாதத்திற்கு 10 முறை, ஒரு அழைப்புக்கு 12 நிமிடம் என்ற வகையில் உயர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனி சிறைகள் மற்றும் மாவட்ட சிறைகளில் நூலக வசதி ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jail inmates will now have the facility to make video calls


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->