கூலி வேலைக்கு செல்லும் இந்திய அணியின் கேப்டன்.. இத்தனை சாதனை கைவசம் இருந்தும் தமிழக அரசு கண்டு கொள்ளாமல் அலைகழித்த கொடுமை..!! - Seithipunal
Seithipunal


வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் ஒரு விளையாட்டு வீரர் இன்று கூலி  தொழில் செய்து பிழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்தியாவை பொறுத்த வரையில் கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டு என்று நினைக்கிறோம். ஆனால் அதையும் தாண்டி பலதரப்பட்ட விளையாட்டுக்கள் இருக்கின்றன.

அவையெல்லாம் புறக்கணிக்கப்பட்டு இன்று ஒரு மூலையில் நசுக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு வருகின்றன.

ஒருகாலத்தில் இந்திய அணியின் தலைவராக இருந்த பிரபல வீரர் ஒருவர் இப்போது ஒருவேளை சோற்றுக்கே வழி இல்லாமல், கூலி வேலைக்கு சென்று அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு செலவிடும் தொகையில் கால் பங்கு கூட பிற விளையாட்டுக்களை மேம்படுத்த செலவிடப்படுவதில்லை என்பது கொடுமையான விசயமாகும்.

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவரான தேவசித்தம்  சிறுவயதிலிருந்தே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவராக விளங்கினார்.

இவரின் கவனம் கிரிக்கெட், கால்பந்து என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் வழக்கத்தை போல அல்லாமல் பிரபலம் இல்லாத 'லங்கடி' எனும் விளையாட்டில் ஆர்வம் காட்டினார்.

இந்த விளையாட்டில் ஆசிய அளவில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் இவர் தலைமையிலான இந்திய அணி தங்கப் பதக்கம் பெற்று அசத்தியது.

அதன்பிறகு  2017ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உலககோப்பைக்கான லங்கடி போட்டியில் இவரது தலைமையிலான இந்திய அணி தங்கம் வென்றது.

இத்தனை சாதனைகளை தன் கையில் வைத்திருந்தும், இன்னும் குடும்பத்தை கரை சேர்க்க கூலி வேலை ஒன்றையே நம்பி இருக்கிறார்.

தனக்கு கிடைத்த நேரத்தில் கிராமத்தில் இருக்கும் பள்ளி சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் லங்கடி விளையாட்டை கற்றுக்கொடுத்து வருகிறார்.

ஜெயலலிதா இருக்கும் பொழுது அரசு வேலை தருவதாகவும், ஊக்க தொகை வழங்குவதாகவும் உறுதி அளிக்கப்பட்டு இதுவரையில் அது தண்ணீரில் எழுதிய எழுத்துக்களாகவே உருமாற்றம் அடைந்திருக்கிறது.

இவரை போன்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாய்ப்புக்காக ஏங்கும் வீரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian team langadi caption


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->