குழந்தைகளுக்கு திருமணம் முடிந்த நிலையிலும் எழுந்த சந்தேக நோய்.! மனைவியை இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டு., கணவன் செய்த துணிகர செயல்.!!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் இருக்கும் அஸ்தம்பட்டி அருகேயுள்ள காந்தி நகரை சார்ந்தவர் காளியப்பன். இவரது மனைவியின் பெயர் சாந்தா. இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில்., தனியாக வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில்., அனைவரிடமும் எதார்த்ததுடன் பழகும் சாந்தாவின் மீது காளியப்பனுக்கு துவக்கத்தில் இருந்து சந்தேகம் இருந்து வந்துள்ளது. 

இதன் காரணமாக இவர்கள் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த வகையில்., நேற்று இரவு வழக்கம் போல இவர்களுக்கு தகராறு துவங்கியுள்ளது. மேலும், மது போதையில் இருந்த காளியப்பன் சாந்தாவிடம் தகராறு செய்துள்ளார். 

மது போதையில் இருந்த காளியப்பன்., உறங்கிக்கொண்டு இருந்த சாந்தாவை சம்பட்டியால் அடித்து கொலை செய்துள்ளார். மது போதையில் மனைவியை கொலை செய்ததை உணர்ந்த அவர்., சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். 

இதனையடுத்து காலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால்., சந்தேகமடைந்து வீட்டின் கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால்., ஜன்னல் வழியாக பார்த்த போது., அவர் கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இந்த தகவல் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., சாந்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும்., சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இவரை கொலை செய்து விட்டு சங்ககிரியில் இருக்கும் உறவினரின் இல்லத்திற்கு சென்று பின்னர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை சங்ககிரி காவல் துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam a lady killed by her husband by his Doubts


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->