தாயாரை கொலை செய்து காவல் நிலையத்தில் சரணடைந்த மகன்.! வாக்குமூலத்தில் அதிர்ச்சியான காவல் துறையினர்.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரை சார்ந்தவர் ஜெயசேகர். இவரது மனைவியின் பெயர் ஜெயமேரி (51). இவர்கள் இருவருக்கும் அமலோற்பவநாதன் என்கிற 28 வயதுடைய மகன் இருக்கிறார். இவர் கடந்த 12 ம் தேதியன்று தாயாரை கொலை செய்ததாக கூறி காவல் நிலையத்தில் நேரடியாக சென்று சரணடைந்தார். 

இதனையடுத்து அமலோற்பவநாதன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் உடனடியாக அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலமாவது., எனது தாயாரின் மீது அதீத அன்பு வைத்திருந்த நான்., ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எனது தாயாரை பல்வேறு முயற்சிகள் செய்து ஜாமினில் வெளியெடுத்தேன். 

பின், முத்தியால்பேட்டையில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து எனது தாயாருடன் தங்கி இருந்த சமயத்தில்., செலவுக்காக பணம் வழங்கி வந்தார். இந்த சமயத்தில் அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டதை அடுத்து., அவரின் மீதான சந்தேகம் ஏற்பட்டு நிரூபணம் ஆனது. இது குறித்து அவரை கண்டித்து கூறியும்., அவர் தவறு செய்து வந்து கொண்டிருந்தார். 

இந்த சூழ்நிலையில்., கடந்த 5 ம் தேதியன்று அதிகாலையில் வீட்டில் எனது தாயார், யாருடனோ வீடியோ அழைப்பில் அரை குறை ஆடையுடன் பேசிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். அந்த சமயத்தில் எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து அவரை நாற்காலியால் தாக்கவே., அவர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். 

பின்னர் சமயலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து கழுத்தறுத்து கொலை செய்தேன். இதற்கு பின்னர் தினம் தினம் அவரை பார்த்து கதறியழுது கொண்டு., தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு வந்தேன். ஆனால் என்னிடம் போதிய தைரியம் இல்லை., உடல் அழுகி துர்நாற்றமும் வீச துவங்கியது. இதனையடுத்து காவல் துறையினரிடம் சரணடைந்து விடலாம் என்று சரணடைந்தேன் என்று அந்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthuchery a mother killed by her son due to illegal affair


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->