ஆந்திர மாநிலத்தால் வந்த வினை..? பொங்கல் நேரத்தில் தமிழகம் சந்தித்த சோதனை - கண்ணீர் விடும் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் பொங்கல் தொடர்ந்து 4 நாள்கள் நடத்தப்படுவது வழக்கம். காணும் பொங்கலில் பொதுமக்கள் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள், கோயில்கள், சுற்றுலாத் தலங்களில் குடும்பத்துடனும், உறவினர்களுடனும் கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம்.

இதன்படி, காணும் பொங்கல் விழாவையொட்டி வேலூர் மாவட்டத்தில் முன்பு மக்கள் பாலாற்றின் கரைகளில் கூடிப் படையலிட்டு, உணவுகளை சமைத்து உண்பதுடன், பல்வேறு விளையாட்டுக்களை ஆடி குதூகலமாக கொண்டாடினர்.

ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே நீரின்றி பாலாறு வறண்டு கிடப்பதால் அதன் கரைகளில் வியாழக் கிழமை நடைபெற்ற காணும் பொங்கல் விழா உற்சாகத்தை முழுமையாக இழந்திருந்ததைக் காண முடிந்தது.

இதேபோல், வேலூர் கோட்டை பூங்கா, கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில், அமிர்தி வன உயிரியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் சொற்ப அளவிலேயே கூடியிருந்தனர்.அப்பகுதிகளிலும் காணும் பொங்கல் விழா களையிழந்து காணப்பட்டது.

இதனால், மக்கள் கூட்டத்தை எதிர்பார்த்து கோட்டை நுழைவு வாயிலில் கரும்பு, தர்பூசணி, குளிர் பானக் கடைகளையும், குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மை கடைகளையும் அமைத்திருந்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். சிறிய வயதில் பாலாற்றின் கரைகளில் குடும்பத்துடன் கூடி சமைத்து காணும் பொங்கலைக் கொண்டாடி வந்தோம்.

தற்போது பாலாற்றில் தண்ணீர் இல்லாததால் பூங்காக்களிலும், கோயில்களிலும் கூடுகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதிகளி லும் எதிர்பார்க்கும் அளவுக்கு கூட்டம் வருவதில்லை. அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் காணும் பொங்கல் விழா மெல்ல மெல்ல களையிழந்து வருவது வருத்தமளிக்கிறது என்கின்றனர் கிராம மக்கள்.

ஆந்திரத்தில் கட்டப் பட்ட தடுப்பணைகள், மணல் கொள்ளை உள்ளிட்டவற்றால் பாலாறு நீரின்றி வறண்டு கிடக்கிறது. நீர்நிலைகள், கோயில்கள், சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குடும்பங்களுடனும், உறவினர்களுடன் கூடி குதூகலிக்கும் காணும் பொங்கல் திருவிழா சமூக மாற்றத்தின் விளைவாக தனது அடையா ளத்தை இழந்து வருகிறது. இவற்றின் விளைவால் ஏற்பட்ட சமூக மாற்றம் காணும் பொங் கல் உள்ளிட்ட கலாச்சார திருவிழாக்களை கலையிழக்கச் செய்து வருகிறது.

முன்பு பொது இடங்களில் மக்கள் கூடிக்களித்த காணும் பொங்கல் விழாவை தற்போது வீடுகளுக்குள்ளாக சுருக்கிவிட்டனர். இதற்கு திருவிழாக்கள் வர்த்தக மயமாகிவிட்டதும் முக்கியக் காரணமாகும். மனித சமுதாயத்தில் மாற்றமும், புதிய வரவுகளும் தவிர்க்க இயலாததுதான்.

அதேசமயம், நீர்நிலைகளையும், விவசாயத்தையும் பாதிக்கக்கூடிய மாற்றத்தை புறக்கணிக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் காணும் பொங்கல் உள்ளிட்ட திருவிழாக்கள் புத்துணர்வு பெறும்.

பருவ மழைகளும் பொய்த்து, தொழிற் சாலைகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்து விட்டதால் விவசாயத் தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றின் விளைவால் ஏற்பட்ட சமூக மாற்றம் காணும் பொங் கல் உள்ளிட்ட கலாச்சார திருவிழாக்களை கலையிழக்கச் செய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In-Palar-10-km-To-distance-Need-to-build-a-block


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->