தமிழகமே அதிர்ந்த அருப்புக்கோட்டை பிரச்சனை.! நாகர்கோவிலில் அரங்கேறிய பெரும் துயரம்.!! ஆசிரியைகள்., மாணவிகளை பலவந்தப்படுத்திய கொடூரம்.!! வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள இறச்சல்குளத்தில் ஜேக்கப் பாரா மெடிக்கல் கல்லூரியானது உள்ளது. இந்த கல்லூரியின் நிறுவனரான ரவி (45) என்பவர் இருந்து வருகிறார். இந்த கல்லூரியில் 10 ற்கும் மேற்பட்ட ஆசிரியைகள் மற்றும் 80 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. 

அதுமட்டுமல்லாது இங்கு பணிபுரியும் ஆசிரியைகளுக்கும் பாலியல் தொல்லை வழங்கப்படுவதாக தொடர் குற்றசாட்டுகள் நிறுவனர் ரவி மீது எழுந்த வண்ணம் இருந்துள்ளது. இந்நிலையில்., கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பணிக்கு புதிதாக சேர்ந்த நாகர்கோவில் பகுதியை சார்ந்த ஆசிரியையை அடிக்கடி தனது அறைக்கு அழைத்து சென்று பேசும் வழக்கத்தை ரவி வைத்துள்ளார். 

அந்த அறைக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக சென்ற ஆசிரியை அழுதபடியே வெளியே வர., இதனை கண்டு பதறிப்போன சக ஆசிரியர்கள் கேட்ட போது., நிறுவனர் ரவி பாலியல் தொல்லை வழங்கியதாக கூறியுள்ளார். இது குறித்து வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் கூறி கதறியழுத்துள்ளார். இதனை கேட்டு கடும் ஆத்திரத்துக்கு உள்ளான பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மறுநாள் கல்லூரிக்கு செல்லவே., இது குறித்து ரவியிடம் கேட்ட போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி மோதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கல்லூரிக்குள் வைத்தே நடைபெற்ற மோதல் குறித்த தகவலானது காவல் துறையினருக்கு தெரியப்படுத்தவே., சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் உடனடியாக கல்லூரிக்கு விரைந்து ஆசிரியையிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., கல்லூரியின் நிறுவனரான ரவி அடிக்கடி அவரது அலுவலகத்திற்கு அழைத்து சென்று பேசும் வழக்கத்தை வைத்துள்ளார். 

அவரின் முரண்பாடான பேச்சுக்கள் எனக்கு பிடிக்கவில்லை என்பதால் அங்கிருந்து வெளியேறினேன்., பின்னர் என்னை காணவந்த சக ஆசிரியை நளினி மற்றும் கலா என்னிடம் சமாதானம் பேசி சென்றனர். இதற்கு அடுத்தபடியாக நிறுவனர் என்னை அழைப்பதாக கூறியதை அடுத்து., நிறுவனரின் அறைக்கு சென்ற சமயத்தில் அவர் என்னை கட்டியணைத்து முத்தமிட்டார். இதனால் பதறிப்போன நான் அவரை அடித்து தள்ளிவிட்டு வெளியேறினேன்.

இது குறித்து எனது பெற்றோரிடம் தெரிவிக்கவே., அவர்கள் வந்து கேட்டதற்கு அவதூறாக பேசி மிரட்டலும் விடுத்தார்., அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த தகவலை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

அதில்., கல்லூரி நிறுவனரான ரவி பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்ததும்., இவருக்கு உதவியாக நளினி மற்றும் கலா ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. கல்லூரியில் பயிலும் மாணவிகளை மிரட்டியும்., இடைநீக்கம் செய்து விடுவதாக கூறியும் அத்துமீறியது தெரியவந்துள்ளது. இது குறித்த பிரச்சனையில் உள்ள மாணவிகள் முன்வந்து வழக்குப்பதிவு செய்ய கூறி புகார் மனு அளித்தால்., அவர்களின் விபரங்கள் பாதுகாக்கப்படும் என்றும்., தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். 

மேலும்., விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைதான நிர்மலாதேவி நேற்று ஜாமினில் வெளிவந்த நிலையில்., தற்போது நடைபெற்ற சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., தற்போது நாகர்கோவிலில் நடைபெற்ற சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in nagarkovil college correspondent sexual harassment teachers and student


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->