ஆள் கடத்தல் வழக்கில் ஐ.ஜி நீதிமன்றத்தில் சரண்!! - Seithipunal
Seithipunal


திருப்பூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பாசி நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு இருமடங்கு லாபம் தருவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் அந்த நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட இயக்குனர்களிடமிருந்து பணம் கேட்டு மிரட்டியதாக மேற்கு மண்டல ஐ.ஜி பிரமோத்குமார், டிஎஸ்பி ராஜேந்திரன், ஆய்வாளர் மோகன், பிரபாகரன் செந்தில்குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. 

பாசி நிறுவன இயக்குனர் கமலவள்ளியை கடத்தி சென்று 3 கோடி ரூபாய் பறித்ததாக இவர்களின் மேல் குற்றச்சாட்டு முன்வைக்கட்ட நிலையில் இவர்கள் அனைவர் மீதும் கோவை 2-வது கூடுதல் சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் நீதிமன்றத்தில் பிரமோத் மட்டும் 2 முறை சமன் அனுப்பியும் ஆஜராகவில்லை.

இதனால் சிபிஐ நீதிமன்றம் பிரமோத்குமாரை கைது செய்து நீதிமன்றத்தின் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் பிரமோத்குமார் சரணடைந்துள்ளார். இவர் தற்போது கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை நிறுவன அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former IG surrendered court in trafficking case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->