#BREAKING || கொலை வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2012 ஆம் ஆண்டு நில தகராறு கொலை வழக்கில் இருந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ரங்கநாதன் உட்பட 12 பேரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசு தரப்பு குற்றவாளிகளுக்கு எதிராக போதிய சாட்சியம் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியதால் விடுதலை செய்வதாக சிறப்பு நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

சென்னை கொளத்தூர் காமராஜர் நகர் அருகே உள்ள காந்தி நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி புவனேஸ்வர் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மர்மகுபலால் வெற்றி படுகொலை செய்யப்பட்டார். நில விற்பனை தொடர்பாக நடைபெற்ற இந்த கொலை வழக்கை கொளத்தூர் காவல் நிலைய போலீசார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை நடத்திய போலீசார் தாக்கல் செய்த குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தது. வில்லிவாக்கம் முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதனின் தூண்டலின் பேரில் தான் இந்த கொலை நடைபெற்றதாகவும் குற்றப்பத்திரிக்கையில் அவர் பெயர் சேர்க்கப்படவில்லை எனவும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளி புவனேஸ்வரின் தந்தை வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ரத்து செய்ததோடு டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள சிபிஐ அதிகாரியை கொண்டு இந்த வழக்கை மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என கடந்த 2014 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய சிபிஐ திமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட ரெண்டு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது ‌. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சாட்சியங்களை சமர்ப்பிக்க தவறியதால் அனைவரையும் விடுதலை செய்வதாக அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former DMK MLA Ranganathan released from murder case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->