யாரும் வெளியே வர வேண்டாம்.!! மயிலாடுதுறை மக்களுக்கு வனத்துறை திடீர் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


டெல்டா மாவட்டமான மயிலாடுதுறையின் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

அந்த தகவலின் அடிப்படையில் மயிலாடுதுறையின் நகர் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் வனத்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது ஒரு பகுதியில் சிறுத்தையின் கால் தடம் பதிந்து இருப்பதை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததை எடுத்து அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில் சிறுத்தை கொண்டு நடுரோட்டில் வேகமாக ஓடும் காட்சி பதிவாகி இருந்தது. இதனை எடுத்து மயிலாடுதுறை நகரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் நகர் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மயிலாடுதுறை நகர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

file image 

பொதுமக்கள் யாரேனும் சிறுத்தை நடமாட்டத்தை கண்டால் 93608 89724 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

இதன் காரணமாக அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Forest dept leopard moment warning in Mayiladuthurai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->