ஆர்ப்பரித்து வரும் காவேரி.! சேலம், தருமபுரி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


கடந்த ஒரு வார காலமாகவே கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, அம்மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி வழிக்கின்றன. இதனால் அந்த அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, வினாடிக்கு 1 இலட்சம் கனஅடி என்று உயர்த்தப்பட்டுள்ளது.

கர்நாடகத்தின் கபினி அணையில் இருந்து சுமார் விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதேபோல கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 60 கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் காவிரிக்கு நீர்வரத்து விநாடிக்கு நாளை காலை 1 இலட்சம் கனஅடியாக நீர் வரும் என்பதால் தருமபுரி மாவட்ட ஆட்சியர் காவேரி கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவித்துள்ளார். 

மேலும், ஒகேனக்கல்லில் அருவியில் குளிக்கவும்,பரிசல்களை இயக்கவும் 7 -வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அந்த பகுதி முழுவதும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளக்காடாக உள்ளது. 

இதேபோல், சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் எடப்பாடி காவிரி கரையோர உள்ள மக்களுக்கு,  சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் கால்நடைகள் மற்றும் தங்களது உடைமைகளை பாதுகாத்து கொள்ளும்படி ஆட்சியர் ரோகிணி வேண்டுகோள் விடுத்துள்ளார். வெள்ளம் தொடர்பாக உதவிக்கு 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார். 

நாளை மேட்டூர் அணைக்கு 80,000 முதல் 90,000 கன அடி வரை நீரை வர உள்ளது. பிலிகுண்டு முதல் மேட்டூர் அணை வரை கரையோரம் உள்ள மக்கள் மேடான இடத்துக்கு செல்ல படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேட்டூர் அணை 90 அடி எட்டியவுடன் நீர் திறப்பது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்று ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FLOOD IN SALEM AND DHARMAPURI


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->