ஈரோடு | குடிநீர் இல்லாததால் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்! போக்குவரத்துக்கு பாதிப்பால் மக்கள் அவதி! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம்: அந்தியூர் அருகே உள்ள வெள்ள பிள்ளையார் கோவில், 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இந்த பகுதியில் சாக்கடை வசதி, தெரு விளக்கு வசதி இல்லை என தெரிகிறது. 

மேலும், இந்த பகுதியில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள ஊருக்குச் சென்று குடிநீர் எடுத்து வரும்நிலை ஏற்பட்டுள்ளதால் வயதானவர்கள், பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

இதனை அப்பகுதி மக்கள், உடனடியாக சீரான குடிநீர் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த 50 -க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை, காலி குடங்களுடன் அந்தியூர்-மைசூர் செல்லும் பிரதான சாலையில் திடீரென சாலை மறியல் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.  

காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் பெரும் அவதி அடைந்தனர். சாலையில் வாகனங்கள் இருபுறமும் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. 

இது குறித்து தகவல் அறிந்து வந்த அந்தியூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர், கெட்டி சமுத்திர ஊராட்சி செயலாளர் பெரியசாமி தலைவர் மாறன் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

அப்போது அப்பகுதி பெண்கள் தெரிவிக்கையில், எங்களுக்கு சீரான குடிநீர் இல்லாமல் நாங்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம் என தெரிவித்தனர். 

பின்னர் அதிகாரிகள், உங்கள் பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில்,  பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode womens demanding drinking water


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->