போதை ஆசாமியின் அட்டுழியம்: நொறுங்கிய அரசு பேருந்தின் கண்ணாடி! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


ஈரோடு, சென்னிமலை பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அரசு டவுன் பேருந்து வந்தது. பேருந்தை ஓட்டுனர், நடத்துனர் இருவரும் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு அருகில் இருந்த கடைக்கு டீ சாப்பிடுவதற்காக சென்றனர். 

அந்த சமயத்தில் அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு டவுன் பேருந்து மீது கல்லை வீசியதால் பேருந்து முன் பக்க கண்ணாடி நொறுங்கியது. 

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுனர், நடத்துனர் விரைந்து வந்து போதை ஆசாமியை பிடித்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரிடம் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் போலீசார் பேருந்தை காவல் நிலையத்திற்கு எடுத்து வருமாறு தெரிவித்து சென்றார். பேருந்தில் போதை ஆசாமியையும் அழைத்து சென்றனர். 

பின்னர் காவல் நிலையத்தில் நடத்திய விசாரணையில், பேருந்தை தாக்கிய போதை ஆசாமி கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பதும் இவர் உணவகத்தில் வேலை பார்க்கும் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. 

மேலும் விசாரணையில் நேற்று இரவு பேருந்து நிறுத்தத்தில் யாரோ ஒருவரிடம் ஏற்பட்ட தகராறினால் ஆத்திரமடைந்து அங்கு நின்று கொண்டிருந்த பேருந்து மீது கல் வீசியதும் தெரிய வந்தது. 

இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பேருந்து ஓட்டுனர் தகவல் தெரிவித்தார். இந்த சம்பவத்தினால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode government town bus glass breaking


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->