ஈரோட்டில் போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்.. திடீரென முன்வைக்கும் அவசர கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


ஈரோட்டில் முக்கிய சாலையின் பெயர் மாற்றத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோட்டில் 80 ஆண்டுகளுக்குமுன்னர் பெயர் சூட்டப்பட்ட பிரஃப்சாலையின் பெயரை, தற்போது மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

ஈரோடு நகர தந்தையாவும், கல்வி தந்தையுமாய் விளங்கியவர் பிரஃப். அவர் நினைவாக பன்னீர்செல்வம் பார்க்கிலிருந்து அரசு தலைமை மருத்துவமனை வரையிலான சாலைக்கு பிரஃப் ரோடு என பெயர் சூட்டப்பட்டது.

பிரஃப் அவர்கள் ஈரோடு நகரம்மட்டுமின்றி கிராம பகுதிகளிலும்சுமார் 96 ஆரம்ப பள்ளிகளையும்,நடுநிலைப்பள்ளிகளையும், செவிலியர் பயிற்சி பள்ளியும், ஆசிரியர்பயிற்சிப் பள்ளியும் நிறுவினார்.

இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறவும், அவர்களதுவாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும்பாடுபட்டார்.

இதனை போற்றும் வகையில் அவர் நினைவாக சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே பிரஃப் ரோடு என பெயர் சூட்டப்பட்டது.

கடந்த பிப்ரவரி 28 அன்று பிரஃப் ரோடு என்பதை மாற்றி மீனாட்சி சுந்தரனார் சாலை என அறிவிக்கப்பட்டது.

இது அனைத்து பொதுமக்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரஃப் அவர்களின் சேவையை புறந்தள்ளுகிற செயலாகவே இப்பெயர் மாற்றத்தை பார்க்க முடிகிறது.

எனவே, பிரஃப் அவர்களின் தியாகத்தை போற்றக்கூடிய வகையில் மீண்டும் இச்சாலைக்கு பிரஃப் ரோடு என்ற பெயரை வைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிடம் மனு அளிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode brough road name change


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->