#சென்னை || இரவு நேரத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கு ஷாக்... ரூ.2.29 கோடி பறிமுதல்.!! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த பூந்தமல்லியில் 2.29 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கோளப்பன்சேரி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்ழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். 

அந்த லோடு வேனில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.29 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். லோடு வேன் ஓட்டுனரிடம் ஆவணங்களை கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஏடிஎம்களில் நிரப்புவதற்காக பணம் கொண்டு செல்லப்பட்டதாக ஓட்டுனர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட 2 கோடியே 29 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் பணத்தை அரசு கருவூலத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். 

மாலை 6 மணிக்கு மேல் ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் விதிகள் தடையை மீறி இரவு நேரத்தில் எடுத்துச் செல்லப்பட்ட‌ 2.29 கோடி ரூபாய் யாருக்காக எங்கு எடுத்துச் செல்லப்பட்டது என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election flying squad Rs2crs 29lahks seized in Chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->