அதிரடி ரெய்டு.. அரசு ஊழியர் வீட்டில் ₹80 லட்சம் மதிப்பு ஆவணங்கள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நேதாஜி நகரை சேர்ந்தவர் குமாரதாஸ் திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சியில் மீட்டர் ரீடராக வேலை பார்த்து வந்த அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் குமாரதாஸ் கடந்த 2018 ஜனவரி மாதம் முதல் 2022 டிசம்பர் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறைக்கு புகார்கள் சென்றது.

அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே நேற்று காலை குமாரதாசின் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் குமாரதாஸ் வீட்டிற்க்குள் அதிரடியாக புகுந்தனர்.

பின்னர் குமாரதாஸின் வீடு முழுவதும் திடீர் சோதனை செய்ததில் சுமார் ₹80 லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்களை கைப்பற்றியதோடு இது தொடர்பாக குமாரதாஸ், அவரது மனைவி சுஜாதா ஆகியோர் மீது நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dvac seized rs80lakh worth documents from govet employee house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->