தமிழகத்தில் நிர்ணயித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தாக இவ்வளவு வழக்குகளா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகைக்கு தமிழக அரசு நிர்ணயித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தாக 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நேற்று இந்து மத மக்களால் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை காற்று மாசு உள்ளிட்ட காரணங்களாக பட்டாசு வெடிக்க தமிழக அரசு 2 மணி நேரம் மட்டும் ஒதுக்கியிருந்தது.

சென்னையில் தமிழக அரசு அனுமதி அளித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும், அதிகளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவாகி உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழகத்தில் நேற்று 364 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. இதில், 254 இடங்களில் பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாகவும், 110 இடங்களில் மற்ற வகை தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீ விபத்தால் உள்நோயாளிகளாக 47 பேரும், புறநோயாளிகளாக 622 பேரும் மருத்துவமனையில் சிகிச்சிக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diwali fire crackers Fire accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->