தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்‌ எப்போது..‌? வெளியான முக்கிய தகவல்.!! - Seithipunal
Seithipunal


நாடும் முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்று வருவதால் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக மாநில அரசின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு மட்டுமே தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் மற்றும் செயல்பாடுகள் ஏதும் மாநில அரசுகளால் முன்னெடுக்க முடியவில்லை. 

இந்த நிலையில் வரும் ஜூன் நான்காம் தேதி மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் அதன் பிறகு நாடு முழுவதும் உள்ள தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் வாபஸ் பெற கூடும். அதனைத் தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளும் வழக்கம்போல் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே வரும் ஜூன் 2வது வாரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் ஜூன் மாதம் 2வது வாரத்தில் அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தி, அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்துடன் நடப்பது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 25 நாட்களாவது தமிழ்நாடு சட்டப்பேரவை நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info Tamil Nadu assembly starts on June 2nd week


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->