தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல திடீர் தடை.! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம், தனுஷ்கோடி அரிச்சல்முனையில் கடல் சீற்றம் திடீரென அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம், தனுஷ்கோடிக்கு நாள்தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகின்றனர். 

நேற்று மாலை திடீரென கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு தனுஷ்கோடி குடியிருப்பு பகுதிக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் அரிச்சல்முனைச் செல்லும் சாலை சேதமடைந்தது. 

இதனை அடுத்து க்யூ பிரிவு காவலர்கள் அரிச்சல்முனைக்குச் சென்று அங்கிருந்த 2000 மேற்பட்ட சுற்றுலா பயணிகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும் இன்று கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால் தனுஷ்கோடி அரிச்சல் முனைச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

வரலாறு காணாத கடல் சீற்றம் காரணமாக தடுப்புகளை தாண்டி நெடுஞ்சாலைக்கு கடல் நீர் வருவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanushkodi Arichalmunai Tourists banned 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->