கூண்டிற்குள் மனவலியுடன் அமைதியாக இருந்த சோகம்.!! சின்னத்தம்பியை கண்காணிக்க எத்தனை கும்கிகளை உபயோகம் செய்கின்றனர் தெரியுமா?.!!   - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் தடாகம் பகுதியில் இருந்த சின்னத்தம்பி யானையை சென்ற 25 ம் தேதியன்று வனத்துறையினர் மயக்க ஊசியை செலுத்தி பிடித்தனர். பின்னர் சின்னத்தம்பி யானையை டாப் சிலிப் வரகாளியாறு பகுதியியல் உள்ள வனப்பகுதியில் விட்டனர். சில நாட்கள் அங்குள்ள பகுதியில் சுற்றி திருந்த சின்னத்தம்பி யானை., 32 ம் தேதிக்கு மேல் கிழக்கு திசையில் பயணிக்க துவங்கி., உடுமலை மைவாடி கருப்பு தோட்டத்தில் உள்ள பகுதியில் புகுந்தது.  

அங்குள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்து தனது பசியை தீர்த்துக்கொண்ட சின்னத்தம்பி., அதே பகுதியில் சுற்றித்திறியவே தகவலறிந்த வனத்துறையினர்., சின்னத்தம்பியை பிடிப்பதற்காக கலீம் மற்றும் மாரியப்பன் என்ற கும்கி யானைகளை வர வழைத்தனர். அங்கு வந்த மாரியப்பன் என்ற கும்கி யானையானது மிரண்டதன் காரணமாக., சுயம்பு என்ற கும்கி வரவழைக்கப்பட்டு இருந்தது. இதற்கு அடுத்தபடியாக நீதிமன்றத்தில் இருந்தும் சின்னத்தம்பி யானையை பிடிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவின் படி நேற்று காலை 7.15 மணிக்கு மயக்க மருந்தை செலுத்தி சின்னத்தம்பியை பிடித்தனர். சின்னத்தம்பியை பிடித்த பின்னர் வரகாளியாறு பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்து., நேற்று சுமார் 12 மணியளவில் வரகாளியாறு பகுதிக்கு கொண்டு சென்று பெரும் முயற்சிக்கு பின்னர் சின்னத்தம்பியை லாரியில் இருந்து இறக்கினர். பின்னர் சின்னத்தம்பியை கூண்டிற்குள் அடைக்க அரைமணி நேர போராட்டத்திற்கு பின்னர் கூட்டிற்குள் வனத்துறையினர் அடைத்தனர். 

சின்னத்தம்பி கூண்டிற்குள் சென்ற பின்னர் அமைதியாக இருந்தது. இதனையடுத்து கால்நடை மருத்துவர்கள் சின்னத்தம்பிக்கு வலி நிவாரணி மற்றும் ஊட்டச்சத்து ஊசிகளை செலுத்திய பின்னர்., கழுத்து மற்றும் கால்களில் இருந்த கயிறுகளை அவிழ்த்துவிட்டனர். சின்னத்தம்பியை தொடர்ந்து கண்காணிப்பதற்காக சுமார் 5 யானைகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chinnathambi elephant was now custody in varagaliar and watching by 5 kumki elephants


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->