இன்று முதல் சென்னை-அயோத்தி நேரடி விமானங்கள்.!! சேவை நேரம் இதுதான்.!! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலம் அயோதியில் சுமார் 2000 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வளாகம் 70 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அதில் கோவில் மட்டும் இரண்டு புள்ளி ஏழு ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்ற நிலையில் சிறப்பு பூஜைகளுக்கு பின்பு குழந்தை ராமர் சிலை கண்திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

முதல் ஆளாக பிரதமர் நரேந்திர மோடி குழந்தை ராமருக்கு பூஜை செய்து வழிபட்டார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தொடர்ந்து ராமரை வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து அயோத்திக்கு இன்று முதல் நேரடி விமான சேவை தொடங்குகிறது.

அதன்படி ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சென்னை ஐஓபி அயோத்தி சென்னை இடையே நேரடி விமான சேவையை வழங்குகிறது. சென்னையிலிருந்து பிற்பகல் 12 45 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 3 15 மணிக்கு அயோத்தியை சென்றடையும்.

அதேபோன்று மறு மார்க்கத்தில் மாலை 4 மணிக்கு அயோதியிலிருந்து புறப்படும் விமானம் மாலை 6:20 மணிக்கு சென்னையை வந்தடையும். ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் போயிங் 737 8 வகை விமானத்தை இந்த சேவைக்கு பயன்படுத்துவதால் ஒரே நேரத்தில் 180க்கும் ஏற்பட்ட பயணிகள் பயணிக்கலாம். விமான சேவை கட்டணமாக ரூ.6499 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai ayothi direct flight today onwards


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->