தமிழ்நாட்டையே சுடுகாடாக்கும் தமிழக அரசு.! பசுமை வழி சாலை திட்டத்தை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் 2000 ஏக்கர் நிலங்கள் பறிபோகும் அவலம்.! - Seithipunal
Seithipunal


செய்யூரில் 2-வது விமான நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். 

சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம் 1,300 ஏக்கரில் இயங்கி வருகிறது. இந்த இடம் விரிவாக்கம் செய்யப்பட்டும் தேவையான இடவசதி இல்லாததால். வேறு  இடத்தில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க அரசு திட்டமிட்டது.   

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த செய்யூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலம்  கையகப்படுத்த இருக்கிறது. குறிப்பாக, செய்யூர் வட்டத்தில் உள்ள அறப்பேடு, ஆயக்குன்னம் மற்றும் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள தொழுப்பேடு பகுதிகள் இந்த 2 ஆயிரம் ஏக்கரில் அமைவதாக தகவல் வெளியாகியுள்ளன.  விமான நிலையம் அமைக்க இன்னும் கூடுதல் இடம் வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றார். 

இதுகுறித்து, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் மாலதி தெரிவிக்கையில், “இந்த இடத்தில் விமானம் நிலையம் அமைவது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கிராமங்களின் வரைப்படங்கள் மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. எதற்காக இந்த வரைப்படங்கள் கொடுக்கப்பட்டது என்றும் தெரியவில்லை” என்றார் மாலதி.

இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் விமான நிலையத்திற்கு எதிப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Airport 2 In Kanjipuram District Seyyur 2000 acre


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->