மோடி மீது செல்போன் வீச்சு - திருப்பூர் விழாவில் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் கேரளாவில் நடைபெற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, திருப்பூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.

அதாவது, பிரதமர் மோடி சிறப்பு விமானம் மூலம் கோவையில் உள்ள விமானப்படை தளத்துக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் வந்தடைந்தார். அங்கு திறந்த வெளி வாகனத்தில் வந்த அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு மலர் தூவியும், பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் பிரதமர் மோடியின் வாகனம் மீது செல்போன் வீசப்பட்டது வீடியோவில் பதிவாகியுள்ளது. 

இதைக் கவனித்த பிரதமர் மோடி, சிறப்பு பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த ஒருவரிடம், செல்போனை அகற்றும்படி கேட்டுக் கொண்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cellphone throw on modi in tirupur palladam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->