கோவையில் மீண்டும் போராட்டம் நடத்த போகும் பாஜக! - Seithipunal
Seithipunal


டியூகாஸ் நிறுவனத்தின் 14 லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டது ஏன்?

கோவை மாவட்டம் துடியலூரில் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் உரங்கள் தரமாகவும், விலை குறைவாகவும் இருப்பதால் கலப்பு உரத்துக்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் ஆண்டுக்கு 2,000 டன் அளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆண்டுக்கு 20 ஆயிரம் டன் கலப்பு உரம் தயாரிக்கும் அளவுக்கு உற்பத்தித்திறன் கொண்ட நிறுவனம் இது. வேளாண் பல்கலை, வேளாண் துறை பரிந்துரைகள் மற்றும் மத்திய மாநில அரசுகளின் லைசென்ஸ் அடிப்படையில் உற்பத்தி நடைபெற்று வந்தது. நிறுவனத்தின் மீது உர ஒதுக்கீட்டு அளவிட கூடுதலாக கொள்முதல் செய்ததாக அதன் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று டியூகாஸ் நிறுவனத்திற்கு வந்த பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன் நிறுவனத்தின் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் "டியுகாஸ் நிறுவனத்தில் 14 லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது மத்திய அரசுக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை சூப்பர் பாஸ்பேட் என்ற உரம் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டதன் காரணமாக லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. உரக்கல் முதல் லைசென்ஸ் மட்டுமே ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. 

ஆனால் மாநில அரசு அதற்கு மாறாக டியூகாஸ் நிறுவனத்தின் மொத்த உள்ள 14 லைசென்ஸ்களையும் ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக இந்நிறுவனத்தின் 450 கோடி ரூபாய் வணிகம் நடைபெறாமல் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டதை திரும்ப பெற வேண்டும் இல்லை என்றால் அனைத்து விவசாயிகளையும் திருப்பி கோவையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். 

தமிழக அரசு தனியார் நிறுவனங்களுக்கு சாதமாக செயல்படுவதன் காரணமாக டியூகாஸ் நிறுவனத்தின் அனைத்து லைசன்ஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjb protest against tucas license cancel


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->