இன்று கரையை கடக்கிறது ''பபுக்'' புயல்.! வானிலை மையம் கடும் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு மாதங்களில் கடுமையான மழை, வெயில், புயல், வறட்சி என்று கால நிலை இருந்த நிலையில், கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக குளிர் வாட்டி வதைத்து வருகிறது. 

தமிழக முழுவதும் காலை நேரங்களில் மூடு பனி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மூடு பனி காரணமாக காலை நேரங்களில் விபத்துக்குள் அதிகம் நடந்து வருகிறது.

மலை பிரதேசமான கொடைக்கானலில் 0 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது. மேலும், அங்குள்ள ஏரி உறைநிலைக்கு சென்றுள்ளது. போட்டியில் 15 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது. 

இந்நிலையில், நீலகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் மலை சார்ந்த பகுதிகளில், வரும் 2 நாட்களுக்கு உறைபனி நிலை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது 

மேலும், தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 24 மணி நேரத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், அந்தமான் கடலில் மையம் கொண்டுள்ள பபுக் புயல் காரணமாக தமிழகம் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக இந்த பபுக் புயல் இன்று அந்தமான் தீவு அருகே கரையை கடக்கும் என்றும், இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BABUK CYCLONE ALERT


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->