அதிமுகவின் முக்கிய புள்ளிகள் நீக்கம்! காரணம் என்ன? சென்னையை அதிர வைத்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


ரவுடி கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகிகள் இருவரை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிவிப்பில், "கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், 

தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த,
C. ஜான்கென்னடி, (ஆயிரம்விளக்கு வடக்கு பகுதிக் கழக மாவட்டப் பிரதிநிதி)
B. சுதாகர் பிரசாத், (111 கிழக்கு வட்டக் கழகச் செயலாளர், ஆயிரம்விளக்கு வடக்கு பகுதி)

ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என்று எடப்பாடி K. பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜான்கென்னடி, சுதாகர் பிரசாத் கைதான நிலையில், அவர்களை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Head Edappadi Palanisamy announce John and sudakar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->