எச்சரித்தும் கோட்டை விட்டுட்டீங்களே - கொந்தளிக்கும் எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


கனமழையால், சென்னையில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்பை தவிர்த்திருக்கலாம் என்றும், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், புயல் ஓய்ந்து 5 நாட்கள் ஆகியும், பல பகுதிகளில் தண்ணீர் வடியவில்லை. வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும், அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் : 

வரும் டிச.26-ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பில், "அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம், கட்சியின் சட்ட திட்ட விதிகள்19 (vii) மற்றும் 25(ii)-ன்படி, வருகின்ற டிச.26, செவ்வாய் கிழமை காலை 10.35 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கட்சியின் அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Edappadi Palanisamy Say About Chennai Floods 2023


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->