3 வருடம் முன்பே எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம்! ஏன்? யாரால் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


அதிமுக மதுரை மாநாட்டில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ''புரட்சித் தமிழர்'' என்ற பட்டம் சூட்டப்பட்டுள்ளது.

அதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு இன்று, மதுரையில் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது.

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலிருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் லட்ச கணக்கில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், மாற்றுத்திறனாளி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டதும், கும்பகோணத்தை சேர்ந்த வயதான தம்பதி இருசக்கர வாகனத்தில் கலந்து கொண்டதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இன்று காலை சுமார் 11 மணியளவில் மாநாட்டு பந்தலில் கே.பழனிசாமி கொடியேற்றி வைத்து தொடக்கி வைத்தார்.

பின்னர், மாநாட்டில் காலை முதல் மாலை வரை தொண்டர்களை மகிழ்விக்க கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இசையமைப்பாளர் தேவாவின் இன்னிசை கச்சேரி, மதுரை முத்து, ரோபா சங்கர், ராஜலெட்சுமி - செந்தில், பட்டிமன்றம் போன்றவையும் நடந்தன.

இந்நிலையில், மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2020 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு 'புரட்சித்தமிழர்' என்ற பட்டத்தை, அக்கட்சியின் தீவிர ஆதரவாளர் வழங்கியிருந்தார் என்பது இந்த சமயத்தில் நினைவு கூறப்பட வேண்டியதாக உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன் அவர்களின் மகன் பாப்பா வெற்றி சுவரொட்டி ஒட்டி இருந்தார்.

அந்த சுவரொட்டியில், லண்டனில் இருந்து தமிழனின் வாழ்த்து. நான் பிறந்த மண்ணான காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி... நன்றி... 

இன்று முதல் புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அவர்கள் வழியில் நீர் இனி 'புரட்சித் தமிழர்' அழைக்கப்படுவீர் என்று, எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிய பட்டத்தையும் வழங்கிய வழங்கி இருந்தார் பாப்பா.வெற்றி.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், பெரும்பண்ணையூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன் அவர்களின் மகன் பாப்பா.வெற்றி இப்போது லண்டனின் செம்ஸ்போர்டு சிட்டியில் ஆளும் கான்சேர்வெட்டிவ் கட்சியின் சார்பாக கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Edappadi Palanisamy Now Puratchi Thamilzhar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->