பேருந்தை கொளுத்தி..! 03 மாணவிகளை கொலை செய்த அதிமுக நிர்வாகிகள் விடுதலை?! - Seithipunal
Seithipunal


கடந்த 2000 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டான்சி வழக்கில் கைது செய்யபட்டபோது, தமிழகம் முழுவது அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், தர்மபுரியில் ஒரு பேருந்தை பயணிகள் உள்ளே இருக்கும் போதே தீயிட்டு அதிமுகவின் நிர்வாகிகள் கொளுத்தினர்.

இந்த சம்பவத்தில், கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகிய மூன்று கல்லூரி மாணவிகள் உயிருடன் எரிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தர்மபுரி அ.தி.மு.க. நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மது, முனியப்பன் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து 3 பேரும் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.

மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 3 பேரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. கடந்த 18 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை பெற்று வரும் அதிமுக நிர்வாகிகள் மூன்று பேரை விடுவிக்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி நீண்டகாலம் ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்து வருகிறது. அந்த வகையில் அடுத்த கட்டமாக தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அ.தி.மு.க.வினர் 3 பேர் விடுதலை செயலாமா என தமிழக அரசு, சிறைத்துறையுடன்ஆலோசனை செய்து வருகிறது. சிறைத்துறையுடன் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. 

அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டதால் அவர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பொருந்துமா? பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஏதும் ஆட்சேபனை தெரிவிக்கிறார்களா? 3 பேரின் மனநிலை தற்போது என்ன? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 COLLEGE GIRL KILLED CASE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->