இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் யார்?  - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. 

அதனைத் தொடர்ந்து இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 9ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மார்ச் 9ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில துவங்க உள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்குள் பாட் கம்மின்ஸ் இந்தியாவிற்கு திரும்ப முடியாது என்றும் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து கேப்டன் பொறுப்பை தொடர்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா அணியை கேப்டனாக வழிநடத்தினார். ஆனால், 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக சொந்த காரணங்களுக்காக பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா சென்றார். இதனையடுத்து ஸ்டீவன் ஸ்மித் 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி வெற்றியும் பெற்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Steven Smith captain of 4th test against India


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->