முக்கிய போட்டியில் இத்தனை மாற்றமா?! இரண்டு அணிகளும் போட்டிபோட்டுக்கொண்டு வீரர்களை மாற்றிவிட்டார்கள்! - Seithipunal
Seithipunal


இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளப்போவது யார் என்பதை முடிவு செய்யும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி கொல்கத்தாவில் இன்று நடக்கவுள்ளது. முதல் தகுதிச்சுற்று போட்டியில் சென்னையிடம் வீழ்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத், தகுதிநீக்கம் போட்டியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸை எதிர்கொள்ளவிருக்கிறது. 

இதற்கு முன்பு ஈடன் கார்டனில் நடந்த தகுதிநீக்க போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாகப் பந்துவீசினார்கள். கடந்த  போட்டியின்போது ஆடுகளம் சுழலுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. இந்த நிலையில் இன்று களமிறங்கும் இரண்டு அணிகளிலும் சுழற்பந்துவீச்சாளர்கள் நிரம்பியுள்ள நிலையில், இந்தப் போட்டி இரு அணிகளுக்கு இடையில் பயங்கரமான யுத்தமாக இருக்கும். 

இந்த தொடரில் இறுதியில் உள்ள 3 அணிகளுமே தமிழகத்தோடு ஏதேனும் ஒருவகையில் தொடர்புடையதாக உள்ளது. ஏற்கனவே பைனலுக்கு தகுதிபெற்ற சென்னை தமிழகத்தின் அணியாக பார்க்க முடிகிறது. அதேபோல கொல்கத்தா அணி தமிழ்நாட்டு வீரர் தினேஷ் கார்த்திகை கேப்டனாக கொண்ட அணியாக உள்ளது. அதேபோல மற்றொரு அணியான ஹைட்ரபாத் தமிழக தொழிலதிபர்கள் சன் குழுமத்தின் அணியாகும். 

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் சீயர்லெஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இந்தியாவின் சிவம் மாவி இணைக்கப்பட்டுளளார். ஹைட்ரபாத் அணியில் மிகப்பெரிய மாற்றமாக மனிஷ்பாண்டே நீக்கப்பட்டு ஹூடாவும், கோஸ்வாமி, சந்தீப் நீக்கப்பட்டு சஹா, கலீல் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த தொடரில் ஆச்சரியமளிக்கும் விதமாக கொல்கத்தா அணி முதல்முறையாக 3 வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கியுள்ளது.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

start the match with lot of change in both teams


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->